Here are a few of the tamil poems and a few haiku's which were there in my diary. I dont have the author for any of these. Sorry about that. I have a quite a few of them more..but they are slightly lengthier.. I have listed only those ones which are short and sweet and are my favorites.
தோல்வி
எனக்கு
தோல்வி பிடிக்கும்
விழும் அடிகள்
அனுபவமாக மாறுவதால்
எனக்கு
தோல்வி பிடிக்கும்
மீண்டும்
ஜெயிப்பேன் என்பதால்
காதலும் கடவுளும்
கடவுளும் காதலும்
ஒன்று தானோ
புலப்படாமல்
புலம்ப வைப்பதால்!!
இல்லாமை
கால் வலிக்கிறதென்று
ரிக்ஷாவில் ஏறினேன்
மனம் வலித்தது
ரிக்ஷா ஓட்டியவனுக்கு
ஒரு கால்
மரக்கால்
வித்தியாசமானவள்
நிஜங்கள் என்னை
அச்சுறுத்துவதில்லை
நினைவுகள் என்னை
அலைக்கழிப்பதில்லை
கனவுகள் என்னை
காதலிப்பதில்லை
கடந்த காலம் என்னை
காயப்படுத்துவதில்லை
நான் நேசிப்பது
நிகழ் காலம் மட்டுமே !
நான் யோசிப்பது
எதிர்காலம் மட்டுமே !
ஆம்
நான் வித்தியாசமானவள் !!
சிலந்தி வலை
விருந்தாளிகளே
விருந்தாகும்
வீடு
காலண்டர்
துகிலுரித்தும்
துக்கம் காணாத
நவீன பாஞ்சாலி
தியானம்
மனதை
ஒருமுகப்படுத்தும்
காதல் கூட
குழந்தை அல்ல
கவலைகள் - உன்
கைக்குழந்தை அல்ல
அதை தூக்கி திரிவதற்கு !!
Haiku without headings
ஆகாயமும் அழகு
பூமியும் அழகு
என் கையில் ரொட்டி துண்டு
ஆபாசச் சுவரோடிகள்
பார்த்துச் சென்றனர் மக்கள்
கிழித்தெறிந்தன மாடுகள்
வாழ வழி
நம்பிக்கையே
மூலதனம் !!
உழைப்பே
அசல்
வெற்றியே
வட்டி !!
கன்னிப்பெண்
தவறு ஏதும்
செய்யாமலே
ஜன்னல் சிறையில்
கைதியாய்
தன்மை
உனது
கைகள் மென்மையானவை
என்பது
எனக்கு
அன்றே தெரியும்!
ஆனால்
உனது செருப்புகள்
இத்தனை கடினமானவை
என்பது
இன்று தான் புரிந்தது!!!
தன்னம்பிக்கை
ஏற வேண்டிய படிகள்
ஏராளம் என்றாலும்
நடந்து வந்த
பாதையை பார்
உனக்கு பின்னே
பலர்
தளராதே !!!
வித்தியாசம்
இதயம் விரிந்திருக்கிறதா ?
மனக்கூற்றுப்படி அது நல்ல உள்ளம்.
உடல்கூற்றுப்படி அது ஒரு வியாதி,
இறைவன் ஆன்மாவிற்கும் உடலுக்கும்
வைத்த வித்தியாசத்தை பார்த்தீர்களா ?
காதல்
என் காதலில்
பெருமைப்பட ஒன்றுமில்லை
சுவசிப்பதைப்பற்றிச்
சிலாகித்துச் சொல்ல
என்ன இருக்கிறது.
சந்தித்த பின்
நான் சிந்தித்த போது
கவியானேன்
உன்னை
சந்தித்த பின்
கவிதையானேன்
Hope you enjoy these..
Ciao...
மீண்டும் சந்திப்போம் !!!
தோல்வி
எனக்கு
தோல்வி பிடிக்கும்
விழும் அடிகள்
அனுபவமாக மாறுவதால்
எனக்கு
தோல்வி பிடிக்கும்
மீண்டும்
ஜெயிப்பேன் என்பதால்
காதலும் கடவுளும்
கடவுளும் காதலும்
ஒன்று தானோ
புலப்படாமல்
புலம்ப வைப்பதால்!!
இல்லாமை
கால் வலிக்கிறதென்று
ரிக்ஷாவில் ஏறினேன்
மனம் வலித்தது
ரிக்ஷா ஓட்டியவனுக்கு
ஒரு கால்
மரக்கால்
வித்தியாசமானவள்
நிஜங்கள் என்னை
அச்சுறுத்துவதில்லை
நினைவுகள் என்னை
அலைக்கழிப்பதில்லை
கனவுகள் என்னை
காதலிப்பதில்லை
கடந்த காலம் என்னை
காயப்படுத்துவதில்லை
நான் நேசிப்பது
நிகழ் காலம் மட்டுமே !
நான் யோசிப்பது
எதிர்காலம் மட்டுமே !
ஆம்
நான் வித்தியாசமானவள் !!
சிலந்தி வலை
விருந்தாளிகளே
விருந்தாகும்
வீடு
காலண்டர்
துகிலுரித்தும்
துக்கம் காணாத
நவீன பாஞ்சாலி
தியானம்
மனதை
ஒருமுகப்படுத்தும்
காதல் கூட
குழந்தை அல்ல
கவலைகள் - உன்
கைக்குழந்தை அல்ல
அதை தூக்கி திரிவதற்கு !!
Haiku without headings
ஆகாயமும் அழகு
பூமியும் அழகு
என் கையில் ரொட்டி துண்டு
ஆபாசச் சுவரோடிகள்
பார்த்துச் சென்றனர் மக்கள்
கிழித்தெறிந்தன மாடுகள்
வாழ வழி
நம்பிக்கையே
மூலதனம் !!
உழைப்பே
அசல்
வெற்றியே
வட்டி !!
கன்னிப்பெண்
தவறு ஏதும்
செய்யாமலே
ஜன்னல் சிறையில்
கைதியாய்
தன்மை
உனது
கைகள் மென்மையானவை
என்பது
எனக்கு
அன்றே தெரியும்!
ஆனால்
உனது செருப்புகள்
இத்தனை கடினமானவை
என்பது
இன்று தான் புரிந்தது!!!
தன்னம்பிக்கை
ஏற வேண்டிய படிகள்
ஏராளம் என்றாலும்
நடந்து வந்த
பாதையை பார்
உனக்கு பின்னே
பலர்
தளராதே !!!
வித்தியாசம்
இதயம் விரிந்திருக்கிறதா ?
மனக்கூற்றுப்படி அது நல்ல உள்ளம்.
உடல்கூற்றுப்படி அது ஒரு வியாதி,
இறைவன் ஆன்மாவிற்கும் உடலுக்கும்
வைத்த வித்தியாசத்தை பார்த்தீர்களா ?
காதல்
என் காதலில்
பெருமைப்பட ஒன்றுமில்லை
சுவசிப்பதைப்பற்றிச்
சிலாகித்துச் சொல்ல
என்ன இருக்கிறது.
சந்தித்த பின்
நான் சிந்தித்த போது
கவியானேன்
உன்னை
சந்தித்த பின்
கவிதையானேன்
Hope you enjoy these..
Ciao...
மீண்டும் சந்திப்போம் !!!
No comments:
Post a Comment